English Website - Click Here

 
 

Home About Our Home Photo Gallery Press Release Please Donate Us Contact Us

 
 

 

About Our Home

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு அன்பு காப்பகமாக எங்கள் பாரதியார் ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகம் திகழ்கிறது. 31-10-2004ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை எங்கள் காப்பகம் ஒரு வாடகை கட்டிடத்தில் நிறுவப்பட்டது. இதன் தாளாளர் பொறுப்பை ஏற்ற திரு. நமச்சிவாயம் அவர்கள் ஏற்றுக் கொண்டார். அன்று 6 குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட எங்களது காப்பகத்தில் இன்று 47 மாணவ மாணவிகள் சேர்ந்து பயன் பெற்று வருகிறார்கள். இவர்களில் 10 மாணவர்கள் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயின்று வருகிறார்கள். அன்று குழந்தையாக சேர்க்கப்பட்ட c.மோகன சுந்தரம் என்ற மாணவன் தனது கல்லூரி படிப்பை (B.Com.,CA.,) முடித்து விட்டு சென்னை மேயர் சைதை துரைசாமி அவர்களின் IAS அகாடமியில் பயிற்சியை நிறைவு செய்து விட்டார். எங்களது காப்பகத்தை சேர்ந்த கௌசல்யா என்ற மாணவி தனது B.Ed., படிப்பை காங்கேயம் பத்ம ஸ்ரீ கல்வியியல் கல்லூரியில் நிறைவு செய்து விட்டார். எங்கள் சொந்த முயற்சியில் திருமணம் செய்து வைத்து அந்த பெண்ணிற்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளோம்.

 
  எங்களது காப்பகமானது முறையாக அறக்கட்டளை சட்டத்திலும் சமூக நலத்துறையிலும் பதிவு பெற்று மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அறக்கட்டளையில் சென்னிமலையை சார்ந்த ஜோதிமணி என்பவர் தலைவராகவும், அன்வர் பாஷா என்பவர் பொருளாளராகவும் உள்ளனர். இவர்களுடன் 8 உறுப்பினர்கள் சேர்ந்து எங்கள் காப்பகத்தை மிக சிறப்பாக செயல்படுத்தி வருகின்றோம். வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த காப்பகத்திற்கு சென்னிமலை விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் திரு.சாமிநாதன், வசந்தா முதலியார் தம்பதியினர் சுமார் 6 சென்ட் நிலத்தை 2010ம் ஆண்டு தானமாக வழங்கினர்

இந்த இடத்தில் அதன் நிறுவனர் மற்றும் தாளாளர் நமச்சிவாயம் அவர்கள் அனைத்து பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் முன்னிலையில் நன்கொடை வசூல் செய்து ரூபாய் 60 லட்சம் மதிப்புடைய கட்டிடத்தை கட்டி தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு. ராமலிங்கம் அவர்கள் 11-09-2011ம் ஆண்டு திறந்து வைத்தார்.

மேலும் காப்பக சிறப்புகள் : -

யோகா, கராத்தே, நடனம், பாட்டு, கம்ப்யூட்டர், கீபோர்டு போன்ற பயிற்சிகளும் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கொண்டு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆங்கில பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தனி ஆசிரியரும், தமிழ் வழியில் படிக்கும் குழந்தைகளுக்கு தனி ஆசிரியரைக் கொண்டும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகிறது.

சுத்தமான உடைகள், சுகாதாரமான, சத்தான உணவு வகைகள், தூய்மையான இடவசதி, சிறப்பான மருத்துவம் போன்ற அனைத்தும் எங்கள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறோம்.மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் காதணி விழா நடத்தி தங்கத்தோடும் அணிதிருக்கின்றனர். அது போல் கௌசல்யா என்ற மாணவிக்கு பூப்பு நன்னீராட்டு விழா நடத்தியுள்ளோம். அந்த ஆதரவற்ற மாணவிக்கு

 
காங்கேயம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. விடியல் சேகர் தம்பதியினர் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் , கலை நிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடுவர். மற்றும் அனைத்து தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாட்கள், சுனாமி தினம், பூகம்பம், கும்பகோணம் தீ விபத்து போன்ற நாட்களில் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தி அந்த நாட்களை முக்கிய தினமாக கருதுகின்றோம்.
 

அன்று முதல் இன்று வரை பல பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் எங்கள் குழந்தைகள் பெற்றுள்ளனர். 2010ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி 7 கொலை விசாரணை கைதிகள் எங்கள் காப்பக குழந்தைகளுக்கு சேவை செய்து சான்றிதழ் பெற்றுள்ளனர், 2011ம் ஆண்டு இக்காப்பகத்தை ஈரோடு சமூக நலத்துறை தேசிய விருதுக்கு பரிந்துரை செய்து அனுப்பியது.

குழந்தைகளை ஒரு ஜனாதிபதி, IAS., IPS., டாக்டர், வக்கீல், நீதிபதி, போன்ற பெரிய பதவிகளுக்கு படிக்க வைத்து அவர்களை தயார் செய்து முதியோர் இல்லம் தொழு மொயாளிகளுக்கு உதவுதல், ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆரம்பித்தல் , இலவச மருத்துவமனை, ஏழை எளிய மக்களுக்கு உதவுதல் போன்ற பல சமூக பணிகளை செய்வது. அதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். எங்களது கனவுகளை மெய்ப்பிக்கும் வகையில் c.மோகன சுந்தரம் என்ற மாணவன் தனது B.Com., CA.,

கல்லூரி படிப்பை முடித்து விட்டு தற்பொழுது மாண்புமிகு சென்னை மேயர் சைதை துரைசாமி அவர்களின் IAS அகாடமியில் IPS தேர்வுக்காக பயிற்சியையும் நிறைவு செய்து விட்டார். எங்கள் இல்லத்தில் உள்ள ஒவ்வொரு மாணவனும் பின்நாளில் சிறந்து விளங்குவர் என்பதற்கு இவரே சிறந்த சான்று. 2016 - 2017 ஆம் கல்வி ஆண்டில் M. சிவரஞ்சிதம் என்ற மாணவன் தான் படித்த பள்ளியில் முதலாவதாகவும், ஈரோடு மாவட்ட அனைத்து ஆதரவற்ற குழந்தைகள் காப்பக அளவில் முதலிடம் பெற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் S. PRABAKAR ஐயா அவர்களிடம் சிறப்பு விருது மற்றும் பாராட்டினை பெற்றுள்ளார்.

காப்பகத்தின் சாதனைகளில் ஒரு சில துளிகள்

வ. எண் மாணவ / மாணவி பெயர் படிப்பு கல்லூரி
1 N. கௌசல்யா B.A. English & B.Ed. Navarasam College of Arts & Science, Arachalur.
Padmashri Kalviyiyal Kalloori, Vattamalai, Kangayam.
2 N. மோகன சுந்தரம் B.Com, CA. MBA Dr. RANM Arts & Science College, Erode.
3 M. ரஞ்சிதா B. Tech. IT MPNMJ Engineering College.
4 M. சிவரஞ்சிதம் B. Com. CS PSG Arts & Science College, Coimbatore.
5 R. கௌசல்யா B. Sc.Nursing Vellalar College of Nursing, Erode.
6 R. செல்வி B. Com. Navarasam College of Arts & Science
7 R. வினிதா B. E.EEE EBET Engineering College, Nathakadaiyur.
8 S. செர்மதுறை ITI Government ITI, Erode.

Home About Our Home Photo Gallery Press Release Please Donate Us Contact Us

For Better Experience, View the site with Google Chrome, Safari or Latest Mozilla Firefox Designed by Purple Web Shop