English Website - Click Here

 
 

Home About Our Home Photo Gallery Press Release Please Donate Us Contact Us

 
 

 
      குடியரசு தின அழைப்பிதழ் - 2016

About Our Home

யார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகமானது 6 குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இந்த காப்பகத்தில் 47 ஆதரவற்ற மாணவ மாணவிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 10 குழந்தைகள் அருகில் உள்ள தனியார் ஆங்கில பள்ளிகளிலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்று குழந்தைகளாக சேர்க்கப்பட்டவர்களில் இன்று c.மோகன சுந்தரம் என்ற மாணவன் B.Com., CA., படிப்பை முடித்து விட்டு, சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி அவர்களின் IAS அகாடமியில் பயிற்சியை நிறைவு செய்து விட்டார். கௌசல்யா என்ற மாணவி தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு பத்ம ஸ்ரீ கல்லூரியில் B.Ed., படிப்பை முடித்து விட்டார். எங்கள் சொந்த முயற்சியில் திருமணம் செய்து வைத்து அந்த பெண்ணிற்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளோம்.

 

Our Mission

குழந்தைகளை ஒரு ஜனாதிபதி, IAS., IPS., டாக்டர், வக்கீல், நீதிபதி போன்ற பெரிய பதவிகளுக்கு படிக்க வைத்து அவர்களை தயார் செய்து முதியோர் இல்லம் தொழு மொயாளிகளுக்கு உதவுதல், ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆரம்பித்தல் , இலவச மருத்துவமனை, ஏழை எளிய மக்களுக்கு உதவுதல் போன்ற பல சமூக பணிகளை செய்வது. அதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். எங்களது கனவுகளை மெய்ப்பிக்கும் வகையில் c.மோகன சுந்தரம் என்ற மாணவன் தனது B.Com., CA., கல்லூரி படிப்பை முடித்து விட்டு தற்பொழுது மாண்புமிகு சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி அவர்களின் IAS அகாடமியில் IPS தேர்வுக்காக பயிற்சி்யை நிறைவு செய்து விட்டார். எங்கள் இல்லத்தில் உள்ள ஒவ்வொரு மாணவனும் பின்நாளில் சிறந்து விளங்குவர் என்பதற்கு இவரே சிறந்த சான்று.

 

Please Donate Us

சுற்று வட்டாரத்தில் உள்ள பொது மக்கள் கொடுக்கும் நன்கொடைகள் மற்றும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாட்களில் வரும் உணவே எங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. தற்போது எங்கள் காப்பகத்தை மிகுந்த சிரமத்திலே தான் நடத்தி வருகிறோம். எங்களது இல்லத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை அளிப்பதே எங்கள் மேலான குறிக்கோளாகும். எனவே உங்களால் முடிந்த நன்கொடைகளை கொடுத்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் கொடுக்கும் நன்கொடை பல குழந்தைகளின் வாழ்வில் இன்பம் மலரவும் அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாய் அமையவும் வழி வகுக்கும் என்பதையும் மிக தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இப்படிக்கு தாளாளர் நமச்சிவாயம்.


Home About Our Home Photo Gallery Press Release Please Donate Us Contact Us

For Better Experience, View the site with Google Chrome, Safari or Latest Mozilla Firefox Designed by Purple Web Shop